\
செம்மரம் கடத்த முயற்சி : ஆந்திராவில் 9 தமிழர்கள் கைது

செம்மரம் கடத்த முயற்சி : ஆந்திராவில் 9 தமிழர்கள் கைது

செம்மரம் கடத்த முயற்சி : ஆந்திராவில் 9 தமிழர்கள் கைது
Published on

ஆந்திர வனப்பகுதியில் இருந்து செம்மரம் கடத்த முயன்ற தமிழகத்தைச் சேர்ந்த 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், ராஜம்பேட்டை வனப்பகுதியில் செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ரோல்லமடுகு வனத்தையொட்டிய பகுதியில் சோதனை மேற்கொண்டபோது கடத்தல்காரர்கள் செம்மரங்களை வெட்டி வனத்தையொட்டிய பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் மேலும் தேடுதல் பணியை தீவிரப்படுத்தினர். 

அப்போது வனப்பகுதியில் இருந்து 20க்கும் மேற்பட்ட கடத்தல்காரர்கள் செம்மரங்களை வெட்டி கொண்டிருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களை காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடிக்க முயற்சி செய்தபோது தப்பியோடினர். தப்பியோடியவர்களை விரட்டி சென்ற காவல்துறையினர் 9 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களிடமிருந்து 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள 108 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. வனப்பகுதியில் தப்பியோடியவர்களை தேடும் பணியில் செம்மரக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com