ரெட் அலர்ட்
ரெட் அலர்ட்முகநூல்

சென்னை, திருவள்ளூருக்கு இன்று ரெட் அலெர்ட்.. 20 செமீ வரை மழை பெய்ய வாய்ப்பு!

டிட்வா புயல் சென்னைக்கு மிக அருகில் நிலைகொண்டிருப்பதால் சென்னை மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது..
Published on
Summary

இலங்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய டிட்வா புயல், தற்போது சென்னையிலிருந்து 40 கிமீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளது.. இந்தசூழலில் சென்னை மற்றும் திருவள்ளூரில் இன்று ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 20 செமீக்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

இலங்கையை ஒட்டி வங்கக் கடலில் உருவான டிட்வா புயல், இலங்கையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து டிட்வா புயல் தமிழகத்தை நோக்கி நெருங்கி வந்ததில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த டிட்வா புயல், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக நேற்று மாலை 5:30 மணி அளவில் வலுவிழந்தது. இது மேலும் வடக்கு நோக்கி நகர்ந்து இன்று மதியத்திற்குள் படிப்படியாக பலவீனமடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என எதிர்பார்க்கப்பட்டது..

இதன் காரணமாக, சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் விடுக்கப்பட்டிருந்த அதிகபட்சமான புயல் எச்சரிக்கை விலக்கப்பட்டு, 3ஆம் எண் எச்சரிக்கையாகக் குறைக்கப்பட்டது.

இந்தசூழலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவிழக்கும் என சொல்லப்பட்ட நிலையில், தற்போது மேகக்கூட்டங்கள் அதிகமாகி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

ரெட் அலர்ட்
வலுவிழந்த டிட்வா புயல்.. கனமழை காரணமாக புதுச்சேரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!

சென்னை, திருவள்ளூருக்கு ரெட் அலெர்ட்..

டிட்வா புயலானது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக சென்னையிலிருந்து 40 கிமீ தொலைவில் நிலைகொண்டிருக்கும் நிலையில், இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தற்போது வலுவிழக்காது என்றும், மேலும் இது வலுவடைய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது..

இதன் காரணமாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அதிக கனமழை நீடிக்கும் என்பதால், இன்று ரெட் அலெர்ட்டும், நாளை ஆரஞ்சு அலெர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.. மேலும் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது..

இதுகுறித்து பேசியிருக்கும் தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன், ”ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது ஆந்திரா நோக்கி நகர்ந்துவிடும் என முன்பு எதிர்ப்பார்க்கப்பட்டது.. ஆனால் தற்போது அடர்ந்த மேகங்கள் அதிகமாகி அதிகப்படியான மழையை உருவாக்கியுள்ளன.. சென்னையிலிருந்து 40 கிமீ தொலைவில் டிட்வா மையம் கொண்டிருக்கும் நிலையில், அடுத்த 2 நாட்களுக்கு சென்னைக்கு அருகிலேயே நீடிக்க வாய்ப்பு உள்ளது.. மேலும் இது வலுவிழக்காமல், தொடர்ந்து வலுவடைந்து வருகிறது.. இதனால் நாளை காலை வரை 20 செமீக்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.. டிசம்பர் 2ஆம் தேதி பிற்பகலுக்கு பிறகு மழை குறைய வாய்ப்பு உள்ளது.. தொடர்ந்து இது புயலாக மீண்டும் உருவாகுமா என்பதை கண்காணிக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது” என பேசியுள்ளார்..

ரெட் அலர்ட்
இலங்கையை புரட்டிப்போட்ட ’டிட்வா’ புயல்.. 80 பேர் உயிரிழப்பு! மக்கள் அவதி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com