தமிழ்நாடு
தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. நீலகிரிக்கு ரெட் அலர்ட்!
நீலகிரி மாவட்டத்தில் இன்று அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவை, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, போன்ற மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தருமபுரி, ஈரோடு, சேலம், திருப்பூர், திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் போன்ற மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.