\
கடலூர்: கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி அழுகிய நிலையில் பிணமாக மீட்பு

கடலூர்: கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி அழுகிய நிலையில் பிணமாக மீட்பு

கடலூர்: கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி அழுகிய நிலையில் பிணமாக மீட்பு
Published on: 

கடலூர் அருகே கொலைவழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி ஒருவர் ஏரியில் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் புதுக்குப்பம் பகுதியில் வசித்து வந்தவர் ஆட்டோ ஓட்டுனர் வினோத். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு குப்பநத்தம் நல்லூர் கிராமத்தில் ஒருவரை கொலை செய்து எரிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளி ஆவார்.

இந்நிலையில் இவர் விருத்தாசலம் அடுத்த வயலூர் ஏரியில் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் ஏரிக்கரையில் அவரது ஆட்டோ நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஆட்டோவில் ரத்தக் கறைகள் இருப்பதால் வினோத் இறப்பில் மர்மம் நீடித்து வருகிறது. ஏரியில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது வினோத்தை யாராவது கொலை செய்து வீசப்பட்டாரா என காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com