\
கை கால் துண்டிக்கப்பட்ட நிலையில் தண்டவாளத்தில் இருந்து குழந்தை சடலமாக மீட்பு

கை கால் துண்டிக்கப்பட்ட நிலையில் தண்டவாளத்தில் இருந்து குழந்தை சடலமாக மீட்பு

கை கால் துண்டிக்கப்பட்ட நிலையில் தண்டவாளத்தில் இருந்து குழந்தை சடலமாக மீட்பு
Published on

பட்டுக்கோட்டையில் கை, கால் துண்டிக்கப்பட்ட நிலையில், பச்சிளம் ஆண் குழந்தையின் உடல் தண்டவாளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி பேருந்து நிலையம் அருகில் உள்ள ரயில்வே தண்டவாளத்தையொட்டி, இன்று காலை பிறந்து சிலமணி நேரங்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையின் உடல் கை, கால்கள் துண்டித்த நிலையில் கிடந்துள்ளது.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக பட்டுக்கோட்டை நகர போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அந்த உடலை கைப்பற்றிய நிலையில் இந்த பச்சிளம் குழந்தையின் உடல் இங்கு எப்படி வந்தது? யார் கொண்டு வந்து போட்டு விட்டுச் சென்றிருப்பார்கள்? என்ற கோணத்தில் விசாரணையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், குழந்தையின் உடல் ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் கிடந்ததால் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இந்த நிலையில் பிறந்து சிலமணி நேரங்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையின் உடல் ரயில்வே தண்டவாளம் அருகே மீட்கப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com