தமிழ்நாடு
"பயிர்க் கடன் தள்ளுபடிக்கான ரசீது 15 நாளில் கிடைக்கும்"-முதல்வர் பழனிசாமி
"பயிர்க் கடன் தள்ளுபடிக்கான ரசீது 15 நாளில் கிடைக்கும்"-முதல்வர் பழனிசாமி
பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ரசீது அடுத்த 15 நாள்களில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 16.43 லட்சம் விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகையான 12,110 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் அண்மையில் அறிவித்தார் முதல்வர் பழனிசாமி. இந்நிலையில் இன்று அரக்கோணத்தில் தேர்தல் பரப்புரையில் பேசிய முதல்வர் பழனிசாமி "பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ரசீது விவசாயிகளுக்கு 15 நாளில் வழங்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.