\
ஆளுநரை முதல்வர் பழனிசாமி சந்தித்ததற்கு இதுதான் காரணம்?

ஆளுநரை முதல்வர் பழனிசாமி சந்தித்ததற்கு இதுதான் காரணம்?

ஆளுநரை முதல்வர் பழனிசாமி சந்தித்ததற்கு இதுதான் காரணம்?
Published on: 

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் பழனிசாமி சந்தித்துள்ளார். 

சென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் பழனிசாமி சந்தித்துள்ளார். ஆளுநர் - முதல்வர் பழனிசாமி இடையே சுமார் அரை மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது பேசப்பட்ட விவகாரங்கள் குறித்து அதிகாரப்பூர்வ காரணங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த சந்திப்பின் போது தலைமைச் செயலாளர் சண்முகம் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இருப்பினும், தமிழக அமைச்சரவையை விரிவாக்கம் செய்வது குறித்து ஆளுநரிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசித்ததாக கூறப்படுகிறது. கொங்கு மண்டலம் மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து தலா ஒருவரை புதிய அமைச்சர்களாக்க முதல்வர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com