வீட்டுமனை வரைமுறை அரசாணையை ரத்து செய்யக் கோரி வழக்கு

வீட்டுமனை வரைமுறை அரசாணையை ரத்து செய்யக் கோரி வழக்கு

வீட்டுமனை வரைமுறை அரசாணையை ரத்து செய்யக் கோரி வழக்கு
Published on

வீட்டுமனைகளை வரைமுறை படுத்துவது தொடர்பான தமிழக அரசின் ஆணையை எதிர்த்து ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் சங்கத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

வீட்டுமனை வரைமுறைக்கான கட்டணம் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டதாக அம்மனுவில் கூறப்பட்டிருந்தது. எனவே அந்த ஆணையை ரத்து செய்துவிட்டு புதிய கட்டணங்களுடன் அரசாணை பிறப்பிக்கப்பட வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டிருந்தது. அங்கீகாரமில்லாத வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்யக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதையடுத்து வீட்டுமனைகளை வரைமுறைப்படுத்துவது தொடர்பான அரசாணையை தமிழக அரசு கடந்த மே மாதம் வெளியிட்டது. அதில் வரைமுறைப்படுத்துவதற்கான கட்டணங்களும் அறிவிக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com