"ஜி.கே.வாசன் காங்கிரஸில் இணைந்தால் அவருக்கு கீழ் பணியாற்ற தயார்"- கே.எஸ்.அழகிரி

"ஜி.கே.வாசன் காங்கிரஸில் இணைந்தால் அவருக்கு கீழ் பணியாற்ற தயார்"- கே.எஸ்.அழகிரி
"ஜி.கே.வாசன் காங்கிரஸில் இணைந்தால் அவருக்கு கீழ் பணியாற்ற தயார்"- கே.எஸ்.அழகிரி

ஜி.கே.வாசன் காங்கிரஸ் கட்சியில் இணைய வேண்டும். வாசனுக்கு கீழ் பணியாற்றுவோம் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசினார்.

மதுரை காளவாசல் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,; அதிமுக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் தங்களை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்த மாற்றுக் கட்சியினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசுகையில்... காங்கிரஸ் கட்சியை மூப்பனார் ஒரு குடும்பமாக நடத்தினார். காமராஜருக்கு பிறகு காங்கிரஸ் கட்சியை வழிநடத்தியவர் மூப்பனார். இன்றும் தமிழகத்தில் தேசிய இயக்கம் என்று சொன்னால் காமராஜரும், மூப்பனாரும் மட்டுமே நினைவுக்கு வருவார்கள்.

காங்கிரஸ் கட்சியை விட்டு மூப்பனார் விலகவில்லை. அன்றைக்கு இருந்த காங்கிரஸ் கட்சி தலைமை சில தவறான முடிவுகளை அரசியல் ரீதியாக எடுத்தனர். அதனால் மூப்பனாருக்கு தனிப்பட்ட பாதிப்பு எதுவும் இல்லை. அரசியல் ரீதியான முடிவுகளை எடுத்தபோது மூப்பனார் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகவும், சோனியா காந்திக்கு ஆதரவாகவும் இருந்தார்.

தனி மனிதர்களை பெரியதாக தமிழ்மாநில காங்கிரஸ் நினைக்கிறார்கள். தனி மனிதர்களை பெரிய நபராக நினைப்பதால் தான் தமிழ் மாநில காங்கிரஸ் சிரமப்படுகிறது. அன்புத் தலைவரான ஜி.கே.வாசன் இந்திய தேசிய காங்கிரசில் இணைய வேண்டும். உங்களுக்கு கீழ் இருந்து நாங்கள் பணியாற்றுகிறோம். அதில் எனக்கு கருத்து வேறுபாடு கிடையாது. காங்கிரஸ் என்பது மிகப்பெரிய விருட்சம் என பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com