கேரளாவில் உயர்ந்த பெட்ரோல் - டீசல் விலை: தமிழக எல்லையில் உள்ள பங்க்-களில் குவிந்த கேரள மக்கள்!

கேரளாவில் மீண்டும் பெட்ரோல் - டீசல் விலை உயர்ந்துள்ளதை தொடர்ந்து, தமிழக-கேரள எல்லையில் உள்ள தமிழக பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் நிரப்புவதற்காக கேரள வாகனங்கள் குவிந்துவருகின்றன.
பெட்ரோல் பங்க்
பெட்ரோல் பங்க்Manu Ks / செய்தியாளர்

கேரளா அரசு அறிவித்த பட்ஜெட்டில் மாநில வாரியாக பெட்ரோல் டீசலுக்கு மீண்டும் இரண்டு ரூபாய் உயர்த்துவதாக அறிவித்திருந்தது. அந்த சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்த நிலையில், கேரளாவில் 107 ரூபாயில் இருந்த ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 109 ரூபாய் ஆகவும், அதுபோல 96 ரூபாயாக இருந்த டீசலின் விலை 98 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

பெட்ரோல் பங்க்
பெட்ரோல் பங்க்

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தமிழக - கேரளா எல்லையான குமரியில் பெட்ரோலின் விலை ரூ.103.87 ஆகவும், டீசலின் விலை ரூ.95.50 ஆகவும் விற்கப்பட்டு வருகிறது. இதைஅறிந்த தமிழக - கேரளா எல்லை பகுதியான பாறசாலை, களியக்காவிளை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், குமரியின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள தமிழக பெட்ரோல் பங்குகளில் வந்து தங்கள் இரு சக்கர வாகனங்களுக்கும், கார் மற்றும் லாரிகளுக்கும் எரிபொருள் நிரப்பி செல்கின்றனர்.

பெட்ரோல் பங்க்
பெட்ரோல் பங்க்

எல்லைப் பகுதியில் உள்ள கேரள பெட்ரோல் பங்குகளில் எவரும் எரிபொருள் நிரப்ப செல்லாததால் வெறிச் சோடி காணப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com