மேலூர் அருகே வாக்குச் சீட்டு குளறுபடி - 30 தேதி மீண்டும் தேர்தல்

மேலூர் அருகே வாக்குச் சீட்டு குளறுபடி - 30 தேதி மீண்டும் தேர்தல்
மேலூர் அருகே வாக்குச் சீட்டு குளறுபடி - 30 தேதி மீண்டும் தேர்தல்

மேலூர் அருகே வாக்குச் சீட்டு குளறுபடியால், வார்டு உறுப்பினர் பதவிக்கு வரும் 30ம் தேதி மீண்டும் தேர்தல் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே சென்னகாரம்பட்டியில் ஊராட்சியில் உள்ள 9வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட சுந்தரேஷன் என்பவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில், நேற்று இப்பகுதியில் அமைக்கப்பட்ட 144வது வாக்குச்சாவடி மையத்தில் 8வார்டு மற்றும் 9வது வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான வாக்குச்சாவடி அமைக்கபட்டிருந்தது.

அதில் இருந்த தேர்தல் அதிகாரிகள் 8வது வார்டில் இருந்த 92 வாக்காளர்களுக்கு 9வது வார்டுக்கு உறுப்பினருக்கான வாக்குச்சீட்டை வழங்கியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த வேட்பாளர்களின் முகவர்கள் அங்கு இருந்த தேர்தல் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டிருந்த நிலையில், கொட்டாம்பட்டி ஒன்றிய உதவி தேர்தல் அலுவலர் பாலசந்தர் சம்பவ இடத்திற்கு வந்து, விசாரனை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து மீண்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் வினய், சம்பந்தப்பட்ட சென்னகாரம்பட்டி 8 வது வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் வரும் 30ம் தேதி அதே 144வது வாக்குச்சாவடி மையத்தில் நடைபெறும் என அறிவிப்பு வெளியீட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com