"அனுபவமும் தகுதியும் இல்லாத அண்ணாமலை போன்றவர்களால் பாஜக சரிவை கண்டுள்ளது" - ஆர்.பி.உதயகுமார்

“அனுபவமும் தகுதியும் இல்லாத அண்ணாமலை உட்பட எந்தக் கொம்பனாலும் அதிமுகவை அழிக்க முடியாது” என சத்தியம் செய்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆதங்கப்பட்டார்.
ஆர்.பி. உதயகுமார் - அண்ணாமலை
ஆர்.பி. உதயகுமார் - அண்ணாமலைபுதிய தலைமுறை

செய்தியாளர்: மணிகண்டபிரபு

மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது அவர் பேசுகையில்... “தமிழக அரசியலில் எந்தவிதமான அரசியல் அனுபவமின்றி வெற்று விளம்பரங்களை செய்து, களத்தில் தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற பேராசையால், எலும்பில்லாத நரம்பில்லாத நாக்கால் நாகரீகமற்ற அரசியல் பண்பாட்டை அண்ணாமலை விதைத்து வருகிறார். எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து, ஆதாரமில்லாமல் அவதூறாக பேசி வருவதற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம்.

“அண்ணாமலை, தன்னை முன்னிலைப்படுத்த முயல்கிறார்”

ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு
ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர் சந்திப்புபுதிய தலைமுறை

அரசியலுக்கு தேவையான தகுதியான பண்பு எதுவும் இல்லாதவர் அண்ணாமலை. அண்ணாமலை, கனவு உலகத்தில் வாழ்ந்து கொண்டுள்ளதை அவரது பேச்சு காட்டுகிறது. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் வளர்ச்சி படிப்படியான வளர்ச்சி. கிளைக் கழக செயலாளராக இருந்து பொதுச் செயலாளர் என்ற உயர்ந்த பதவிக்கு வந்துள்ளார். அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாட்டால் உள்நோக்கம் கொண்டு எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்கிறார். அண்ணாமலை, தன்னை முன்னிலைப்படுத்த முயல்கிறார். ஆனால், அதற்கான அனுபவம் ஆற்றல் தியாகம் உழைப்பு இருக்கிறதா என்றால் இல்லை.

ஆர்.பி. உதயகுமார் - அண்ணாமலை
அதிமுக vs பாஜக | முற்றும் வார்த்தை மோதல்... “நம்பிக்கை துரோகி என்றால் அது EPS-தான்” - அண்ணாமலை

“குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள மோடி”

அண்ணாமலை கரூரில் தோற்றார். கோயம்புத்தூரில் பணத்தை இறைத்தும் மக்களால் நிராகரிக்கப்பட்டார். பாஜக வளர்ந்துள்ளதாக வார்த்தை ஜாலம் காட்டுகிறார். 15 மத்திய அமைச்சர்கள், பிரதமர் என தொடர்ந்து பிரசாரம் செய்தும் ஒரு இடத்தை கூட பிடிக்க முடியவில்லை.

அண்ணாமலை போன்றவர்கள் செய்த காரியத்தால்தான் இன்று அவர்களுக்கு தோல்வி. நான் இதைச் சொல்லக் கூடாது என நினைத்தாலும் சொல்ல வேண்டிய நிலையில் உள்ளேன்.

கடந்த தேர்தலின் போது 5.5 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற மோடியே தற்போது 5 சுற்றுகள் பின்தங்கி 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றுள்ளார்.

“திட்டமிட்டு முன்னணி தலைவர்களை புறந்தள்ளி விட்டார்”

அண்ணாமலை
அண்ணாமலை@annamalai_k

மெஜாரிட்டி இல்லாமல் இன்று மைனாரிட்டி அரசாக பாஜக கூட்டணியாக மத்தியில் ஆட்சியில் உள்ளது. அண்ணாமலை போன்ற தகுதியில்லாத, அனுபவமில்லாத அரைவேக்காடு தலைவர்களால்தான் பாஜகவுக்கு இன்று பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தியே இவ்வளவு வாக்குகளை பெற்றது.

ஆனால், பாஜக மோடியை காட்டியும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. தேர்தலில் பாஜக பெற்ற வாக்கு அண்ணாமலைக்கு விழுந்த வாக்கு இல்லை. பலருடன் கூட்டணி வைத்து இந்த வாக்கு சதவீதத்தை பெற்றுள்ளனர். இந்த வாக்குகள் அண்ணாமலை முகத்திற்காக கிடைத்தது இல்லை. தினகரன், ஜான்பாண்டியன், சரத்குமார், பாரிவேந்தர் உள்ளிட்டோரை காட்டியே வாக்கு சேகரித்தார். அண்ணாமலை திட்டமிட்டு பாஜகவில் உள்ள முன்னணி தலைவர்களை புறந்தள்ளி வைத்துவிட்டு செயல்பட்டு வருவதாக அவரது கட்சியினரே கூறுகிறார்கள்.

ஆர்.பி. உதயகுமார் - அண்ணாமலை
“அண்ணாமலை போன்றவர்களால்தான் பாஜக தேசிய அளவில் சறுக்கலை சந்தித்துள்ளது” – விளாசிய எடப்பாடி பழனிசாமி

“அண்ணாமலை தமிழகத்திற்கு எதை பெற்றுத் தந்துள்ளார்?”

300 இடங்களை பிடித்த பாஜக, 272 இடங்களை கூட பிடிக்க முடியவில்லை. அண்ணாமலை போன்ற நபர்களால்தான் பாஜக இந்த தோல்வியை தழுவியுள்ளது. ஜெயலலிதாவை தொடர்ந்து அவதூறாக பேசிவரும் அண்ணாமலையின் பேச்சை எந்த அதிமுக தொண்டனும் சகித்துக் கொள்ள மாட்டார்கள்.

டெல்லியில் மோடியின் அருகில் எடப்பாடி பழனிசாமியை உட்கார வைத்து விட்டு, தமிழகத்தில் அதிமுகவின் அடித்தளத்தை அசைத்து பார்க்கிற வேலையில் தொடர்ந்து ஈடுபட்டீர்களா இல்லையா என்று மனசாட்சியை தொட்டுச் சொல்லுங்கள் அண்ணாமலை. இவ்வளவு வாய்ச்சவடால் பேசுகிற அண்ணாமலை மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு எதை பெற்றுத் தந்துள்ளார். பேரிடர் நிவாரண நிதியை கூட பெற்றுத்தர முடியாதவர் அண்ணாமலை.

ஆர்.பி உதயகுமார்
ஆர்.பி உதயகுமார்முகநூல்

கர்நாடக மேகதாது அணை, முல்லைப் பெரியாறு அணை பிரச்னைக்கு வாய்ந்திறக்கிறாரா அண்ணாமலை?

மெட்ரோ திட்டத்திற்கு இரண்டாம் கட்டமாக நிதி வழங்கவில்லை என திமுக குற்றம் சாட்டுகிறது. ஆனால் வாய் சவுடால் பேசும் அண்ணாமலை மத்திய அரசிடம் இருந்து பெற்று தந்தாரா? கர்நாடக மேகதாது அணை, முல்லைப் பெரியாறு அணை பிரச்னைக்கு வாய்ந்திறக்கிறாரா அண்ணாமலை?. அண்ணாமலை போன்ற அரைவேக்காடுக்கு அரசியல் வாழ்க்கை கேள்விக்குறி.? மோடிக்கு அருகில் உட்கார வைத்துவிட்டு என்ன என்ன செய்தார்கள். தமிழகத்தின் ஜூவாதார உரிமைகளில் எல்லாம் மத்திய அரசு வாயே திறக்கவில்லை. தமிழகத்திற்கு என்ன செய்தீர்கள் மிஸ்டர் அண்ணாமலை?

ஆர்.பி. உதயகுமார் - அண்ணாமலை
”தி.மு.க. சார்ந்த கொள்கைகளை விஜய் பேசப் பேச தமிழகத்தில் பா.ஜ.க வளரும்” - அண்ணாமலை

“துரோகி என்ற வார்த்தையை அண்ணாமலை வாபஸ் பெற வேண்டும்”

அண்ணாமலைக்கு வயிற்றெரிச்சல். அதிமுக வளர்ச்சியை எடப்பாடி பழனிசாமி வளர்ச்சியை தாங்கி கொள்ள முடியாமல் வார்த்தையை கொட்டுகிறார். துரோகி என்ற வார்த்தையை அண்ணாமலை வாபஸ் பெற வேண்டும். அதிமுக தொண்டர்களை சீண்டிப்பார்க்க வேண்டாம். பாஜக என்ற கட்சியை அண்ணாமலை வளர்த்துக் கொள்ளட்டும். அதிமுகவை பற்றி அண்ணாமலைக்கு என்ன கவலை. அண்ணாமலையை எதிர்த்து சிறை நிரப்பும் போராட்டம் உள்ளிட்ட எந்த போராட்டத்திற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். அண்ணாமலை பேசியதை வாபஸ் வாங்க வேண்டும். வாபஸ் வாங்கவில்லை என்றால் எவ்வித போராட்டமும் நடத்த அதிமுக தொண்டர்கள் தயாராக இருக்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமிட்விட்டர்

“அம்மாவின் ஆன்மா மீது சத்தியம். அதிமுக தொண்டர்கள் கொதித்து எழுந்தால்...”

இதயக்கனி என பாடி இரட்டை இலையை நெஞ்சில் ஏந்தியவர் எம்ஜிஆர். எந்தக் கொம்பனாலும் அதிமுகவை அழிக்க முடியாது. இது அம்மாவின் ஆன்மா மீது சத்தியம். அதிமுக தொண்டர்கள் கொதித்து எழுந்தால் அண்ணாமலை போன்றவர்கள் அரசியலில் இருந்து அப்புறப்படுத்தப்படுவார்கள். அதிமுக அனாதை கட்சி அல்ல. 1.5 கோடி தொண்டர்களை கொண்ட இயக்கம் வாழாவெட்டி ஆக்குவதற்கு தான் வீடுதேடி தினகரனை சென்று அண்ணாமலை சந்தித்துள்ளார். 2016ல் பாஜக ஒரு கூட்டணி வைத்து வெற்றி பெற்றது அதில், அவர்கள் பெற்ற வாக்கு சதவீதம் எண்ணிக்கை என்ன?. 2019 அதிமுக கூட்டணியில் அவர்கள் பெற்ற சதவீதம் என்ன தற்போது 2024 தனித்து நின்று ஒரு சதவீதம் வாக்கு அதிகமாக பெற்று இருக்கிறோம் அதெல்லாம் வைத்து தான் பொதுச் செயலாளர் கூட்டணி குறித்து முடிவெடுப்பார்.

“நாளை இவர் டெல்லி தலைவர்கள் பேசியதை கூட வெளியிடுவார் டெல்லி தலைமை உஷாராக இருக்க வேண்டும்”

ஒரு தலைமைக்கான பண்பு என்ன என்று தெரியுமா.? தலைமைக்கான பண்புக்கான அடையாளம் ரகசியம், நம்பிக்கை காப்பாற்றப்பட வேண்டும். நாளை இவர் டெல்லி தலைவர்கள் பேசியதை கூட வெளியிடுவார் டெல்லி தலைமை உஷாராக இருக்க வேண்டும். 52 ஆண்டுகளை கடந்து பொன்விழா கண்ட கட்சி, 32 ஆண்டுகள் மக்களுக்கு ஆட்சி வழங்கிய அதிமுக கட்சியின் தலைமையை நாவடக்கம் இல்லாமல் அண்ணாமலை பேசுவது கண்டிக்கத்தக்கது.

அண்ணாமலை
அண்ணாமலை புதிய தலைமுறை

கடந்த முறை மானிய கோரிக்கையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்ட ஒழுங்கு குறித்து கூறியதை அரசு கேட்டிருந்தால் இன்றைக்கு கட்சித் தலைவர்கள், ஆம்ஸ்ட்ராங் உள்ளிட்ட மாநில தலைவர்கள் கொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்கள். கள்ளக்குறிச்சி மற்றும் ஆம்ஸ்ட்ராங் படுகொலைகளால் தமிழ்நாடு சுடுகாடு ஆகி உள்ளது” என பேசினார்.

ஆர்.பி. உதயகுமார் - அண்ணாமலை
2015ல் தென்னரசு, 2023ல் ஆற்காடு சுரேஷ், 2024ல் ஆம்ஸ்ட்ராங்... குலைநடுங்க வைக்கும் அதிர்ச்சி பின்னணி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com