\
பரோலில் சொந்த ஊருக்குச் சென்றார் ரவிச்சந்திரன்

பரோலில் சொந்த ஊருக்குச் சென்றார் ரவிச்சந்திரன்

பரோலில் சொந்த ஊருக்குச் சென்றார் ரவிச்சந்திரன்
Published on

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இருந்த ரவிச்சந்திரன் இன்று பரோலில் சொந்த ஊருக்குச் சென்றார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இருந்த ரவிச்சந்திரன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “கடந்த 26 ஆண்டுகளாக நன்னடைத்தையுடன், தண்டனை கழிந்துவிட்ட நிலையிலும் சிறையில் உள்ளேன். எனது தாயாருக்கு 62 வயதாகிவிட்ட நிலையில் அடிக்கடி நோய்வாய்ப்படுகிறார். எனவே சொத்து மற்றும் வேளாண் விவகாரங்களை எனது தாயார் தனியாக கையாள இயலாத நிலையில் உள்ளார். குடும்பத்தின் சொத்துப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்காக 26 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் எனக்கு, ஒரு மாதம் நீண்ட கால பரோலில் செல்ல அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் நீதிபதிகள் விமலா - கிருஷ்ணவள்ளி அமர்வு, அரசியல் சார்ந்து பேசக்கூடாது. ஊடகங்களுக்குப் பேட்டி அளிக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் மார்ச் 5 முதல் 19-ம் தேதி வரை  சாதாரண விடுப்பு வழங்கி உத்தரவிட்டிருந்தனர். மேலும், விடுப்பு காலங்களில் காவல்துறை பாதுகாப்புடன் வழக்கறிஞரை சந்திக்கவும், பதிவுத்துறை அலுவலகத்திற்கு செல்லவும், மீனாட்சியம்மன் கோயிலுக்கு செல்லவும், சொத்துக்களை பார்வையிடவும் அனுமதிக்க வேண்டுமென உத்தரவிட்டனர். இதனையெடுத்து  இன்று ரவிச்சந்திரன் காவல்துறை பாதுகாப்புடன் பரோலில் சொந்தச் ஊருக்கு சென்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com