food courtpt desk
தமிழ்நாடு
திருச்சி பிரபல துணிக்கடை உணவகத்தில் குழந்தை சாப்பிட்ட பர்கரில் இருந்த எலியின் எச்சம் - பரபரப்பு
திருச்சியில் உள்ள பிரபல துணிக்கடை உணவகத்தில் குழந்தை சாப்பிட்ட பர்கரில் எலியின் எச்சம் இருந்ததால் வாக்குவாதம்.
திருச்சியில் உள்ள பிரபல ஜவுளிக்கடை (சென்னை சில்க்ஸ்) மாடியில் உணவகம் உள்ளது. அந்த உணவகத்தில் திருச்சி தென்னூர் பகுதியைச் சேர்ந்தவர் தனது குழந்தையுடன் பர்கர் சாப்பிட்டுள்ளார். அப்போது உணவில், எலியின் எச்சம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உணவகத்தில் பணிபுரியவர்களிடம் இதுகுறித்து கேட்டுள்ளார்.
burgerpt desk
அதற்கு அவர்கள் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறியதோடு சாப்பிட்டதற்கு பில் தொகையையும் வாங்கியுள்ளனர். இதனால் குழந்தையுடன் சாப்பிட வந்தவருக்கும் உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து குழந்தையும் பர்கர் சாப்பிட்டதால் உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.