\
தீபாவளிக்காக கூடுதல் நேரம் இயங்கும் ரேசன் கடைகள்

தீபாவளிக்காக கூடுதல் நேரம் இயங்கும் ரேசன் கடைகள்

தீபாவளிக்காக கூடுதல் நேரம் இயங்கும் ரேசன் கடைகள்
Published on

தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை ரேஷன் கடைகள் திறந்து வைக்க உணவு வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது.

உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் தலைமையில் கடந்த 11ம் தேதி நடைப்பெற்ற ஆய்வுக்கூட்டத்தில் ”அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் பயன்பெறும் வகையில் நவம்பர் 2021 மாதத்திற்கான சிறப்பு அத்தியாவசியப் பொருட்கள் விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்” என உத்தரவிடப்பட்டது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரையிலான தினங்களில் நியாயவிலைக் கடைகள் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை திறக்கப்பட வேண்டும் எனவும், குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com