தமிழ்நாடு
ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்க லாரியில் ஜிபிஎஸ் கருவி
ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்க லாரியில் ஜிபிஎஸ் கருவி
தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்கும் வகையில் அவற்றை ஏற்றிச் செல்லும் லாரிகளில் ஜிபிஎஸ் (GPS) கருவியை பொருத்துவது கட்டாயமாக்கப்படுகிறது.
முதற்கட்டமாக கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம் மாவட்ட உணவுப் பொருள் சேமிப்பு கிடங்கில் இருந்து இயக்கப்படும் லாரிகளில் ஜிபிஎஸ் (GPS) கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழ்நாடு குடிமைப் பொருள் கழகத்தில் இயக்கப்படும் அனைத்து லாரிகளிலும் இந்த ஆண்டு இறுதிக்குள் ஜிபிஎஸ் பொருத்த திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.