\
வீட்டிற்கே வந்து கொரோனா உதவித்தொகை டோக்கன் வழங்கப்படும் - அமைச்சர் காமராஜ்

வீட்டிற்கே வந்து கொரோனா உதவித்தொகை டோக்கன் வழங்கப்படும் - அமைச்சர் காமராஜ்

வீட்டிற்கே வந்து கொரோனா உதவித்தொகை டோக்கன் வழங்கப்படும் - அமைச்சர் காமராஜ்
Published on

கொரோனா வைரஸ் உதவித்தொகைக்கான டோக்கன் ரேசன் கார்டுதாரர்களுக்கு வீட்டிற்கே வந்து வழங்கப்படும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனால் கூலித்தொழிலாளிகள் மற்றும் சிறு, குறு வியாபாரிகள் வருமானத்தை இழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து ஏழை குடும்பத்தினருக்கு ரேசன் கடைகளில் உதவித்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில், குடும்ப அட்டைத்தாரர்களுக்கான உதவிக்தொகைக்கான டோக்கன் வந்து வீடுகளுக்கே வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு நாளும் ரேஷன் கடைகளில் 100 பேருக்கு உதவி தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், உதவித்தொகைக்கான டோக்கன் கிடைத்தவுடன் அடுத்த நாள் ரேஷன் கடைகளுக்கு வந்தால் போதும் எனவும் அவர் கூறினார்.

முன்னதாக, உதவித்தொகைக்கான டோக்கன் வாங்க ரேஷன் கடைகளுக்கு இன்று பல இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கொரோனா தொற்று தடுப்புக்காக சமூக விலகலை கடைபிடித்து வரும் நிலையில், கூட்டம் கூடுவது அச்சத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்தே அமைச்சர் இத்தகைய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com