\
ரேஷன் முறைகேடுகளை தவிர்க்க புகார் எண் வெளியீடு

ரேஷன் முறைகேடுகளை தவிர்க்க புகார் எண் வெளியீடு

ரேஷன் முறைகேடுகளை தவிர்க்க புகார் எண் வெளியீடு
Published on

ரேஷன் கடைகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கும் வகையில் உணவுத்துறை சார்பாக புகார் எண் வழங்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் ஒரு கோடியே 94 லட்சம் குடும்ப அட்டைதாரர்களின் தொலைபேசி எண்கள் ஸ்மார்ட் கார்டு பயன்பாட்டிற்காக ஏற்கனவே பெறப்பட்டுள்ளன. இந்நிலையில், சில பகுதிகளில் பொருட்கள் வாங்காத நிலையில் வாங்கியதாக குறுஞ்செய்தி வருவதாகக் குடும்ப அட்டைதாரர்கள் புகார் கூறினர். அது தொடர்பாக 9980904040 ஆகிய எண்ணிற்கு புகார் அனுப்பலாம் என்றும், அதன் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உணவுத்துறை தெரிவித்துள்ளது. வாங்காத பொருளை வாங்கியதாகக் குறுஞ்செய்தி வந்தால், அதை இந்த தொலைபேசி எண்ணுக்கு ஃபார்வேர்ட் செய்து புகாரை பதிவு செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com