உரிய அனுமதியில்லாமல் எலி பேஸ்ட் விற்பனை - பறிமுதல் செய்த காவல்துறையினர்.

உரிய அனுமதியில்லாமல் எலி பேஸ்ட் விற்பனை - பறிமுதல் செய்த காவல்துறையினர்.
உரிய அனுமதியில்லாமல் எலி பேஸ்ட் விற்பனை - பறிமுதல் செய்த காவல்துறையினர்.

 புதுக்கோட்டை மாவட்டத்தில் உரிய உரிமம் பெறாமல் எலி பேஸ்ட் விற்பனை செய்த கடைகளில் சோதனை  நடத்திய  காவல்துறையினர் 1000-க்கும் மேற்பட்ட எலி பேஸ்ட்களை பறிமுதல் செய்துள்ளனர்.


உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எலி பேஸ்ட்டுக்களை உரிய அனுமதி பெற்ற வேளாண் விற்பனை நிலையங்கள் மற்றும் வேளாண் மருந்து கடைகளில் மட்டுமே விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மளிகைக் கடைகளில் எலி பேஸ்ட்களை உரிய அனுமதி இல்லாமால் விற்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து புதுக்கோட்டை மளிகைக் கடைகளில் சோதனை நடத்திய காவல்துறை கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் தலைமையிலான குழு, 58 கடைகளில் உரிய அனுமதி மற்றும் உரிமம் பெறாமல் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட எலி பேஸ்ட் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து பேசிய போலீசார், புதுக்கோட்டை மாவட்டத்தில் அனுமதியின்றி எலி பேஸ்ட் விற்கும் கடைகளின் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உரிமம் பெற்ற வேளாண்மை விற்பனை நிலையம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து விற்பனை செய்யும் கடைகளில் மட்டுமே எலி பேஸ்ட்களை விற்க வேண்டுமென்றும் கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com