Rahunathpt desk
தமிழ்நாடு
ராசிபுரம்: கட்டுப்பாட்டை இழந்த கார் பேருந்து நிழற்குடை மீது மோதி பயங்கர விபத்து - 3 பேர் உயிரிழப்பு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து நிழற்கூடத்தின் மீது மோதிய விபத்தில் வனக்காவலர் உட்பட மூவர் உயிரிழந்தனர்.
கொல்லிமலையில் இருந்து ராசிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த கார், மேளப்பாளையம் அருகே சென்றபோது சாலை வளைவில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பேருந்து நிழற்கூடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
car accidentpt desk
இதில் காரை ஓட்டிவந்த கொல்லிமலை வனக்காவலர் ரகுநாத், மர வியாபாரிகள் ராஜன் மற்றும் செல்வக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து சென்ற காவல் துறையினர் மூவரது உடல்களையும் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.