\
ராசிபுரம்: ஓட்டுக்கு பணம் தரவில்லை என சாலை மறியலில் ஈடுபட்ட 5 பேர் கைது

ராசிபுரம்: ஓட்டுக்கு பணம் தரவில்லை என சாலை மறியலில் ஈடுபட்ட 5 பேர் கைது

ராசிபுரம்: ஓட்டுக்கு பணம் தரவில்லை என சாலை மறியலில் ஈடுபட்ட 5 பேர் கைது
Published on

ராசிபுரத்தை அடுத்துள்ள பட்டணம் கிராமத்தில் ஓட்டுக்கு பணம் தரவில்லையெனக் கூறி 20-க்கும் மேற்பட்டோர் சாலைமறியலில் ஈடுபட்டனர். 5 பேரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த பட்டணம் கிராமத்தில் உள்ள அம்மன் நகர் பகுதியில் அரசியல் கட்சியினர் பணம் கொடுப்பதற்காக வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அங்கு வந்த அரசியல் கட்சியினர் பணம் கொடுக்காமல் அடுத்த பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

இதனை கண்டித்து 20-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினரை கண்டதும், சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் சிதறி ஓடினர். இதனையடுத்து 5 பேரை கைது செய்த ராசிபுரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com