குழந்தைகள் விற்பனை வழக்கு : கைதானவர்களின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு
ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 12 பேரின் நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்ட ஓய்வு பெற்ற செவிலியர் அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன், கொல்லிமலை சுகாதார துறை ஓட்டுனர் முருகேசன், குழந்தை விற்பனை இடைத்தரகர்களான ஈரோட்டை சேர்ந்த பர்வின், ஹசீனா, லீலா, அருள்சாமி, செல்வி, கொல்லிமலை பாதிரியார் கந்தசாமி உள்ளிட்டவர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய உதவி செவிலியர் சாந்தி, பெங்களூரை சேர்ந்த இடைத்தரகர் ரேகா மற்றும் அமுதவள்ளி, ஓட்டுனர் நந்தகுமார் என மொத்தம் 12 பேர் சிறையில் உள்ளனர்.
இவர்களின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் 12 பேரையும் நாமக்கல் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி லதா முன்பு சிபிசிஐடி போலீசார் ஆஐர் படுத்தினர். அவர்களை விசாரணை செய்த நீதிபதி லதா, அனைவரது நீதிமன்ற காவலையும் வரும் ஜீலை 18ஆம் தேதி வரை நீடித்து உத்திரவிட்டார். இதனையடுத்து 12 பேரும் மீண்டும் சேலம் மத்திய சிறைகளில் அடைக்க அழைத்து செல்லப்பட்டனர்.