\
ஆழமான பகுதியில் சிக்கியதால் நேர்ந்த பரிதாபம்; குட்டையில் குளிக்க சென்ற 2 மாணவிகள் பலி!

ஆழமான பகுதியில் சிக்கியதால் நேர்ந்த பரிதாபம்; குட்டையில் குளிக்க சென்ற 2 மாணவிகள் பலி!

ஆழமான பகுதியில் சிக்கியதால் நேர்ந்த பரிதாபம்; குட்டையில் குளிக்க சென்ற 2 மாணவிகள் பலி!
Published on

குட்டையில் குளிக்க சென்ற 10ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்பு மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் ராசிபுரம் பகுதியில் நடந்துள்ளது.

ராசிபுரம் அடுத்த அத்திப்பழகானூர் பகுதியில் உள்ள நத்தமா குட்டையில் குளிக்கச் சென்ற 10ஆம் வகுப்பு ஜணணி, 8ஆம் வகுப்பு ரட்சணாஸ்ரீ என பள்ளி மாணவிகள் 2 பேர் குட்டையில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அத்திப்பழகானூர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் மகள் ஜனனி(14) 10ஆம் வகுப்பு மற்றும் அதே பகுதியில் சேர்ந்த கண்ணன் என்பவரது மகள் ரட்சணாஸ்ரீ 8ஆம் வகுப்பு இருவரும் ராசிபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் இன்று பள்ளி விடுமுறை என்பதால் அத்திப்பழகானூர் அருகே உள்ள நத்தமா குட்டையில் 2 மாணவிகளும் குளிக்க சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்றதால் 2 மாணவிகளும் குட்டையில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

பின்னர் தகவலறிந்த ஊர் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து குட்டையில் மூழ்கிய மாணவிகளின் சடலத்தை மீட்டெடுத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக ராசிபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, பள்ளி மாணவிகளின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com