"நண்பர் இப்ராஹிம் ராவுத்தர் இறந்த போது ஒரு குழந்தை போல் அழுதார்”- ராசி அழகப்பன் பகிர்ந்த நினைவலைகள்!

“ இவரது நண்பர் இப்ராஹிம் ராவுத்தர் இறந்த சமயம் அவர் ஒரு குழந்தை போல் அழுத சமயம் நானும் அங்கு தான் இருந்தேன்” இயக்குநர் ராசி அழகப்பன்.
விஜயகாந்த்
விஜயகாந்த்PT

உடல்நலக்குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார். அவருக்கு வயது 71. தேமுதிக அலுவலகம் மற்றும் தீவுத்திடலில் கட்சித்தொண்டர்கள், ரசிகர்கள், நண்பர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். பின்னர் தீவுத்திடலில் இருந்து மக்கள் வெள்ளத்தில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலக வளாகத்தில் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. தமிழக அரசு சார்பில் 72 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.

இதனிடையே விஜயகாந்த்தின் இனிமையான மறுபக்கத்தை விவரித்த இயக்குநர் ராசி அழகப்பன், “இவரது நண்பர் இப்ராஹிம் ராவுத்தர் இறந்த சமயம் அவர் ஒரு குழந்தை போல் அழுத சமயம் நானும் அங்கு தான் இருந்தேன். பொதுவாக சொல்லுவாங்க மதுரைகாரர்களை நம்பினால் யாரும் கெட்டுபோவதில்லை, அவங்க பாசகாரங்கன்னு என்று அதற்கு உதாரணம் விஜயகாந்த். அவர் ஒரு கருப்பு வள்ளளார்” என்கிறார்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com