\
ஆவடியில் அரிய வகை ஆஸ்திரேலிய ஆந்தை: பார்க்க பொதுமக்கள் ஆர்வம்

ஆவடியில் அரிய வகை ஆஸ்திரேலிய ஆந்தை: பார்க்க பொதுமக்கள் ஆர்வம்

ஆவடியில் அரிய வகை ஆஸ்திரேலிய ஆந்தை: பார்க்க பொதுமக்கள் ஆர்வம்
Published on

ஆவடி அருகே சிக்கிய ஆஸ்திரேலியா நாட்டு அரியவகை ஆந்தையை பொதுமக்கள் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு குடியிருப்பு பகுதியில் இன்று காலை திடீரென அரியவகை ஆந்தை ஒன்று கீழே விழுந்து கிடந்துள்ளது. இதனை பார்க்க அங்கு ஏராளமானோர் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பறக்க முடியாமல் தடுமாறிய நிலையில் கிடந்த அந்த ஆந்தையை மீட்ட சமூக ஆர்வலர் பாலமுருகன் என்பவர் இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். தகவல் தெரிவிக்கப்பட்டு நீண்ட நேரம் கழித்து வந்த வனத்துறையினர் அந்த ஆந்தையை மீட்டு முதலுதவி சிகிச்சையளித்தனர். இது ஆஸ்திரேலியா நாட்டு அரியவகை ஆந்தை என்றும், பிற பறவைகளால் தாக்கப்பட்டு கீழே விழுந்திருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com