\
Rail
Railpt desk

ராணிப்பேட்டை: திடீரென ஏற்பட்ட சிக்னல் கோளாறு – நடுவழியில் நிறுத்தப்பட்ட ரயில்கள்...

அரக்கோணம் அருகே சிக்னல் கோளாறு காரணமாக நடுவழியில் நிறுத்தப்பட்ட விரைவு ரயில்கள்.
Published on

செய்தியாளர்: நாராயணசாமி

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த மேல்பக்கம் ரயில் நிலையம் அருகே ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக சென்னையில் இருந்து அரக்கோணம் காட்பாடி வழியாக மைசூர் செல்லும் சதாப்தி அதிவிரைவு ரயில் அரக்கோணம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. சிக்னல் கோளாறு ஏற்பட்ட பகுதியில் ரயில்வே ஊழியர்கள் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டதால் சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு ரயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக புறப்பட்டுச் சென்றன.

Rail
Railpt desk

சிக்னல் கோளாறு காரணமாக சென்னையில் இருந்து மைசூர் செல்லும் சதாப்தி விரைவு ரயில் அரக்கோணம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டதால் இந்த ரயிலுக்கு பின்னால் வந்த, சென்னையில் இருந்து கோவைக்கு செல்லும் கோவை அதிவிரைவு ரயில் மற்றும் அரக்கோணத்தில் இருந்து வேலூர் செல்லும் மெமோ பாசஞ்சர் ரயில் உள்ளிட்ட ரயில்கள் அரக்கோணம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டதால் ரயில் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com