
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலைய பகுதிகளில் யாசகம் பெற்று வாழ்ந்து வருபவர் அன்னம்மாள் (72). இவர் வழக்கம் போல யாசகம் பெறுவதற்கு சாலையில் சென்றுள்ளார். அப்போது சாலையில் கேட்பாரற்று ரூ.40,000 மதிப்பிலான செல்போன் ஒன்று கிடந்துள்ளது. உடனே அந்த செல்போனை எடுத்த அன்னம்மாள், அதை ஆற்காடு நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
யாசகம் பெரும் அன்னம்மாள் என்ற மூதாட்டியின் இந்த செயலை காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.