பாம்பனை மிரட்டும் சூறைக்காற்று - திரும்பிய ரயில்கள்!
ராமேஸ்வரம் பாம்பனில் சூறைக்காற்று வீசி வருவதால், ரயில்கள் செல்லமுடியாமல் திருப்பி அனுப்படுகின்றன.
ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பாலம் கடலுக்கு மேல் கட்டப்பட்டிருப்பது அனைவரும் அறிந்ததே. இந்தப் பாலத்தில் ரயில்கள் செல்லும் காட்சி காண்பதற்கே சிறப்பாக இருக்கும். ஆனால் மழைக்காலம் மற்றும் புயல் காலத்தில் இந்தப் பாலத்தில் ரயில் பயணம் என்பது சிக்கலான ஒன்றாகும். இந்நிலையில் இன்று பாம்பன் பாலம் இருக்கும் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசி வருவதால், ரயில் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி வந்த பாஜஞ்சர் ரயில் பாம்பன் பாலத்தை கடந்து செல்லாமல், மண்டபத்திற்கு திருப்பி அனுப்பட்டது. அத்துடன் ராமேஸ்வரத்தில் இருந்து 6 மணிக்கு செல்லும் மதுரை பயணிகள் ரயிலும் ரத்து செய்யப்பட்டது மேலும் 5 மணிக்கு ராமேஸ்வரத்திலிருந்து சென்னை செல்லும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் ரயில் நிலையத்திலே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.