\
வெடிக்கப்போகும் மீனவர்கள் போராட்டம்.. 4 அம்ச கோரிக்கைகள் நிறைவேறுமா?

வெடிக்கப்போகும் மீனவர்கள் போராட்டம்.. 4 அம்ச கோரிக்கைகள் நிறைவேறுமா?

வெடிக்கப்போகும் மீனவர்கள் போராட்டம்.. 4 அம்ச கோரிக்கைகள் நிறைவேறுமா?
Published on

நான்கு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம் நடத்தப்போவதாகத் தெரிவித்துள்ளனர். 

ராமேஸ்வரம் துறைமுகத்தில் இன்று காலை மீனவச் சங்கங்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், இலங்கைச் சிறைகளில் நூறு நாட்களுக்கும் மேலாக நோய்வாய்ப்பட்டு அவதியுற்று வரும் 27 தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கைக் கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான 184 படகுகளை விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் அப்போது எழுப்பப்பட்டது. இவ்வாறாக 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்து வரும் 31ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டமும், பேருந்து நிலையம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெறும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் பங்கேற்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com