\
ரமேஸ்வரத்தில் கிடைத்தவை வெடிகுண்டுக்கு உகந்த தோட்டக்கள் - ஆய்வில் தகவல்

ரமேஸ்வரத்தில் கிடைத்தவை வெடிகுண்டுக்கு உகந்த தோட்டக்கள் - ஆய்வில் தகவல்

ரமேஸ்வரத்தில் கிடைத்தவை வெடிகுண்டுக்கு உகந்த தோட்டக்கள் - ஆய்வில் தகவல்
Published on

ராமேஸ்வரத்தில் தோண்ட, தோண்ட தோட்டாக்கள் கிடைத்த இடத்தில் ‌ஆறாவது நாளாக ஆய்வு நடைபெற்றது. 

ராமேஸ்வரம் தங்கச்சிமடத்திலுள்ள அந்தோணியார்புரத்தில் எடிசன் என்பவரது வீட்டில் கழிவுநீர் தொட்டி அமைப்பதற்காக நேற்று குழி தோண்டப்பட்டது. அப்போது, தோட்டாக்கள், வெடிக்காத குண்டுகள் கிடைத்தன. சம்பவ இடத்திற்கு வந்து நிபுணர்கள் நடத்திய ஆய்வில் 54 பெட்டிகளில் பத்தாயிரம் தோட்டாக்கள், வெடி மருந்துகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன. கைப்பற்றப்பட்ட பொருட்கள் அந்தோணியார்புரத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. 

ஆயுதங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மதுரையில் இருந்து வந்துள்ள வெடிகுண்டு தடுப்பு மற்றும் அழிப்புப்பிரிவு காவல்துறையினர் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை ஆய்வு செய்தனர். ஆய்வின்போது பெட்டி, பெட்டியாக கிடைத்துள்ள தோட்டாக்களில் 70 சதவிகிதம் தோட்டாக்கள், வெடிகுண்டுகள் பயன்பாட்டிற்கு உகந்தவை என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஏற்கனவே தோட்டாக்கள் கிடைத்த இடம் மற்றும் அதற்கருகில் மண்ணுக்கு கீழே ஆயுதங்கள் ஏதேனும் உள்ளதா என்று சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com