\
ராமேஸ்வரம்: அப்துல் கலாம் சகோதரர் உடல் நல்லடக்கம்... ஏராளமானோர் அஞ்சலி

ராமேஸ்வரம்: அப்துல் கலாம் சகோதரர் உடல் நல்லடக்கம்... ஏராளமானோர் அஞ்சலி

ராமேஸ்வரம்: அப்துல் கலாம் சகோதரர் உடல் நல்லடக்கம்... ஏராளமானோர் அஞ்சலி
Published on

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் மூத்த சகோதரர் உடல் ராமேஸ்வரத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில், ஏராளமானோர் பங்கேற்றனர்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் மூத்த சகோதரர் முஹமது முத்து மீரா மரைக்காயர் (104) வயது முதிர்வின் காரணமாக ராமேஸ்வரத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று இரவு காலமானார்.


இதையடுத்து, அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராமேஸ்வரம் முஸ்லீம் தெருவில் உள்ள அவரது வீட்டில் வைக்கபட்டது. நேற்று இரவு முதல் பல்வேறு அரசியல் கட்சியினர், உள்ளூர் பொது மக்கள் என ஏராளமானோர் அவரது உடலுக்கு மாலை அணிவித்த அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் இன்று பிற்பகல் அவரது வீட்டில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ராமேஸ்வரத்தில் உள்ள முகைதீன் ஆண்டவர் தொழுகை பள்ளியின் வளாகத்தில் இஸ்லாமிய முறைபடி உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com