\
ராமேஸ்வரம் கோயில் கருவறைக்குள் விஜயேந்திரர் நுழைய முயன்றதற்கு கடும் எதிர்ப்பு

ராமேஸ்வரம் கோயில் கருவறைக்குள் விஜயேந்திரர் நுழைய முயன்றதற்கு கடும் எதிர்ப்பு

ராமேஸ்வரம் கோயில் கருவறைக்குள் விஜயேந்திரர் நுழைய முயன்றதற்கு கடும் எதிர்ப்பு
Published on

ராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில் கருவறைக்குள் காஞ்சி சங்கர விஜயேந்திரர் நுழைய முயன்றதால் தமிழக பிராமணருக்கும் - மஹாரஸ்ட்டிர பிராமணருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

தமிழக பீடாதிபதிகளில் முக்கியமாக திகழ்பவர் காஞ்சி சங்கர விஜயேந்திரர். இவர் கடந்த இரு தினங்களுக்கு முன் இராமேஸ்வரம் வந்திருந்தார். காஞ்சி சங்கரமடத்தில் சிறப்பு யாகம் மற்றும் பூஜைகளில் ஈடுபட்ட அவர் இன்று காலை இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயிலுக்கு சென்றார். அப்போது அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூர்ண கும்ப மரியாதை செய்து  வரவேற்று அவரை கோயிலுக்குள் அழைத்து சென்றனர்.

இந்நிலையில், சுவாமி சன்னதிக்கு சென்ற விஜயேந்திரர் பூஜை செய்வதற்காக கருவறைக்கு செல்ல முயலும் போது ஏற்கனவே கருவறைக்குள் இருந்த பாரம்பரியமான மஹாராஸ்ட்டிர பிராமணர்கள் அவரை கருவறைக்குள் செல்ல அனுமதி மறுத்தனர். இதன்பின் தமிழ் பிராமணருக்கும் - மஹாரஸ்ட்டிர பிராமணருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிலவியது.,

பின்னர் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி விஜயேந்திரரை கருவறைக்குள் அனுமதிக்கப்பட்டதையடுத்து காஞ்சி விஜயேந்திரர்  சிறப்பு தீபாராதனை செய்தார். பாரம்பரியத்தை காப்பதற்காக சுவாமி சன்னதி முன் கூச்சல் குழப்பம் நிலவியது, அங்கிருந்த பலரின் மத்தியில் மனவேதனையை ஏற்படுத்தியது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com