மூன்று அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் மீனவர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மீனுக்கு உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், மானிய விலை டீசலின் அளவை மூன்றாயிரம் லிட்டராக உயர்த்தி தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் பாம்பன் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால்,சுமார் 150-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.
மேலும், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலை இழந்துள்ளனர். இந்த வேலை நிறுத்தம் காரணமாக, நாளொன்றுக்கு ஐம்பது லட்சம் ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.