\
“அதிமுக ஆட்சியில்தான் அனைத்து சமூக மக்களுக்கும் பாதுகாப்பு”- முதலமைச்சர் பழனிசாமி

“அதிமுக ஆட்சியில்தான் அனைத்து சமூக மக்களுக்கும் பாதுகாப்பு”- முதலமைச்சர் பழனிசாமி

“அதிமுக ஆட்சியில்தான் அனைத்து சமூக மக்களுக்கும் பாதுகாப்பு”- முதலமைச்சர் பழனிசாமி
Published on

தமிழ்நாட்டில் அனைத்து சமூக மக்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் ஒரே ஆட்சி அதிமுக ஆட்சிதான் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் நடைபெற்ற ராமசாமி படையாட்சியார் நினைவு மண்டபத்தை திறந்து வைத்து பேசிய முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். சுதந்திரப் போராட்ட வீரரும், சமூக நீதிக்காக பாடுபட்டவருமான ராமசாமி படையாட்சியாருக்கு தமிழக அரசு சார்பில் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. 

2 கோடிய 15 லட்சம் ரூபாய் செலவில் 1.7 ஏக்கர் பரப்பில் கட்டப்பட்ட நினைவு மண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி , ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். ராமசாமி படையாட்சியார் நினைவு மண்டபத்தின் உள்ளே அமைக்கப்பட்டுள்ள அவரது முழுஉருவ வெண்கலச் சிலை மற்றும் நூலகத்தையும் முதலமைச்சர் திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து நினைவுமண்டப வளாகத்தில் மரக்கன்றையும் முதலமைச்சர் ‌நட்டு வைத்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com