\
சட்டப்பேரவையில் ராமசாமி படையாட்சியார் உருவப்படம் திறப்பு

சட்டப்பேரவையில் ராமசாமி படையாட்சியார் உருவப்படம் திறப்பு

சட்டப்பேரவையில் ராமசாமி படையாட்சியார் உருவப்படம் திறப்பு
Published on: 

தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் ராமசாமி படையாட்சியார் உருவப்படத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். 

காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது ராமசாமி படையாட்சியார் உள்ளாட்சித்துறை அமைச்சராக பணியாற்றினார். திருவள்ளுவர், காந்தி, அம்பேத்கர், காயிதே மில்லத், ராஜாஜி, காமராஜர், பெரியார், முத்துராமலிங்கத் தேவர், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய 11 பேரின் புகைப்படங்கள் ஏற்கனவே சட்டப்பேரவையில் உள்ளது. இந்நிலையில் 12 படமாக ராமசாமி படையாட்சியார் படம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிகழ்ச்சியில் சபாநாயகர் தனபால், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் எதிர்கட்சித்தலைவரும் திமுக தலைவருமான ஸ்டாலின், துணைத்தலைவர் துரைமுருகன் உள்ளிட்டோரும் விழாவில் பங்கேற்றுள்ளனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com