முன்னாள் எம்பியும், நடிகருமான ராமராஜன் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
அவருடன் முன்னாள் எம்எல்ஏவும், நடிகருமான அருண்பாண்டியன், நடிகர் தியாகு உள்ளிட்டோரும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ராமராஜன், மக்கள் விரும்பியதாலேயே ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்ததாகக் கூறினார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம் என்றும், அவர் சிறப்பான முறையில் ஆட்சி புரிவார் என்றும் பேசினார். ஓபிஎஸ் என்பதற்கு ஓயாமல் பொறுப்பாகச் செயல்படுபவர் என்று புது விளக்கத்தினையும் ராமராஜன் கொடுத்தார். தமிழக அரசியல் வரலாற்றில் முதல்முறையாக மக்களின் புரட்சி நடந்து கொண்டிருப்பதாகவும், மக்கள் சக்தியே மாபெரும் சக்தி என்றும் பேசினார்.