ராமநாதபுரம்: பாம்பன் விசைப்படகு மீனவர்களை கற்களால் தாக்கிய இலங்கை கடற்படையினர்

ராமநாதபுரம்: பாம்பன் விசைப்படகு மீனவர்களை கற்களால் தாக்கிய இலங்கை கடற்படையினர்

ராமநாதபுரம்: பாம்பன் விசைப்படகு மீனவர்களை கற்களால் தாக்கிய இலங்கை கடற்படையினர்
Published on

பாம்பன் விசைப்படகு மீனவர்களை கற்களைக் கொண்டு தாக்கியும் வலைகளை வெட்டியும் இலங்கை கடற்படையினர் விரட்டியடித்துள்ளனர். 

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை அடுத்துள்ள பாம்பன் தெற்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று 500-க்கு மேற்பட்ட விசைப்படகுகளில் 1500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். இந்த நிலையில் மன்னார் வளைகுடா பகுதியில் அன்றன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர், கற்களை எறிந்து தாக்குதல் நடத்தியும் வலைகளை வெட்டி வீசியதோடு, வலைகளை எடுத்து சென்று விட்டதாகவும் மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கடந்த இரண்டு நாள்களாக இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வலைகளை வெட்டி அட்டூழியம் செய்து வருவதால் மீன் பிடிக்க முடியாமல் பெருநஷ்டம் ஏற்பட்டு வருவதாக மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர். இந்நிலையில், இன்று இலங்கை கடற்படையால் தாக்கப்பட்ட படகு உரிமையாளர் அன்றனை நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது தாக்கப்பட்டது உண்மைதான் எனவும் வெட்டிய வலைகளை இலங்கை கடற்படையினர் சென்ற பின்னர் திரும்பி போய் எடுத்து வந்ததாகவும் புதிய தலைமுறைக்கு தகவல் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com