\
ராமநாதபுரத்தில் கடல் கொந்தளிப்பு : இழுத்துசெல்லப்பட்ட பனைமரங்கள்

ராமநாதபுரத்தில் கடல் கொந்தளிப்பு : இழுத்துசெல்லப்பட்ட பனைமரங்கள்

ராமநாதபுரத்தில் கடல் கொந்தளிப்பு : இழுத்துசெல்லப்பட்ட பனைமரங்கள்
Published on

ராமநாதபுரத்தில் வீசிவரும் சூறைக்காற்றால் கரையோரங்களில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளன. 

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி, கீழக்கரை மற்றும் தேவிப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக வீசிவரும் சூறைக்காற்றால் கரையோரங்களில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச்செல்லவில்லை. சூறைக்காற்று காரணமாக பனைமரங்கள் கடலுக்குள்‌ இழுத்துச்செல்லப்பட்டன. 

இதனால் ஊருக்குள்‌ கடல்‌ நீர் புகும் என்று மீனவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இப்பகுதிகளில் தூண்டில் வளைவு எனப்படும் அலை தடுப்பு சுவர் அமைத்து தந்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com