ராமநாதபுரத்தில் யோகா நிகழ்ச்சிக்கு ஆட்சியர் தாமதமாக வந்ததால், மைதானத்திலேயே மாணவர்கள் தூங்கிவிட்டனர்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் ஹாக்கி மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை 7 மணிக்கு என்று அறிவிக்கப்பட்டிருந்த யோகா நிகழ்ச்சிக்கு அதிகாலை 5 மணிக்கே ஒரு சில ஆசிரியர்கள் வெளியூர்களிலிருந்து மாணவர்களை அழைத்து வந்திருந்தனர். ஆட்சியர் வந்த பின்னர் யோகா நிகழ்ச்சி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஏராளமான மாணவர்கள் காலை முதலே ஆட்சியரின் வருகைக்காக மைதனாத்தில் காத்திருந்துள்ளனர். ஆனால் நீண்ட நேரமாக ஆட்சியர் வரவில்லை. இதனால் வெளியூர்களிலிருந்து வந்திருந்த மாணவர்கள், பயணக்களைப்பில் மைதானத்திலேயே தூங்கிவிட்டனர். பின்னர் சிறிது நேரத்திற்குப் பிறகு அவர்களை எழுப்பி யோகா நிகழ்ச்சி நடத்தப்பட்டது.