ராமநாதபுரம் - “யாருக்கும் சுதந்திரம் இல்லை” சுதந்திர தினத்தன்று பணியை ராஜினாமா செய்த காவலர்! #Video

ராமநாதபுரத்தில் காவலரொருவர் தன் பணியை ராஜினாமா செய்வதாக சுதந்திர தினத்தன்று வீடியோ வெளியிட்டுள்ளார்.

ராமநாதபுரம் கேணிக்கரை காவல்நிலையத்தில் கார்த்திக் என்பவர் காவலராக பணிபுரிந்து வருகிறார்.

நேற்றைய தினம் இவர் ராஜினாமா தொடர்பாக வெளியிட்டுள்ள வீடியோவில், “இந்தியா சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகளாகியும் யாருக்கும் சுதந்திரம் இல்லை. அதனால் நான் உயிர் மூச்சாக நினைக்கும் என் காவலர் பணியை ராஜினாமா செய்கிறேன்” என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை தொடர்பு கொள்ள பல முறை முயன்றோம். ஆனால் தொடர்பு கொள்ளமுடியவில்லை. கண்காணிப்பாளர் அலுவலகத்தை தொடர்புகொண்டபோது, ராமேஸ்வரத்தில் தற்போது ஆடி அமாவாசை பாதுகாப்பு குறித்த ஆய்வில் கண்காணிப்பாளர் இருப்பதாக கூறப்பட்டது.

காவலர் கார்த்திக்
“வாழ்வதற்கே அச்சுறுத்தல்! இதுவா பண்புள்ள சமூகம்?” சுதந்திர இந்தியாவில் பெருகும் மதவாதம், அடக்குமுறை!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com