\
ராமநாதபுரம்
ராமநாதபுரம்புதிய தலைமுறை

ராமநாதபுரம் | இருசக்கர வாகனத்தில் சென்றபோது வெடித்த செல்போன்... இளைஞர் உயிரிழப்பு!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, செல்போன் வெடித்து இளைஞர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published on

செய்தியாளர்: அ.ஆனந்தன்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே ஓட்டப்பாலத்தைச் சேர்ந்த 36 வயது நபர் ரஜினி. இவர் கடந்த ஜூலை 21 ஆம் தேதி, தனது நண்பர் பாண்டி என்பவருடன் மதுரைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். பின் அவர்கள் பரமக்குடிக்கு திரும்பி வந்து கொண்டிருந்த பொழுது தெளிச்சாத்தநல்லூர் அருகே திடீரென ரஜினியின் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த poco செல்போன் வெடித்துள்ளது.

இதில் ரஜினி அதிர்ச்சி அடைந்த நிலையில், அவரின் இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளது. இதனால், ரஜினி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மேலும் உடன் வந்த நண்பர் பாண்டி லேசான காயங்களுடன் மீட்கப்பட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம்
துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர் பதவிகள்.. சீனியர் vs ஜூனியர்.. திமுகவில் என்ன நடக்க வாய்ப்பு?

இந்நிலையில், உயிரிழந்த ரஜினியின் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து, இந்த விபத்து குறித்து பரமக்குடி நகர் போலீசார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com