ராமநாதபுரம்: அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த 4 பசு மாடுகள் பரிதாபமாக உயிரிழப்பு

ராமநாதபுரம்: அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த 4 பசு மாடுகள் பரிதாபமாக உயிரிழப்பு

ராமநாதபுரம்: அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த 4 பசு மாடுகள் பரிதாபமாக உயிரிழப்பு
Published on

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் மின்சாரம் தாக்கியதில், விவசாயி வளர்த்து வந்த நான்கு பசு மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.

முதுகுளத்தூர் அய்யனார் கோயில் தெருவில் வசிக்கும் விவசாயி தனசேகரன் என்பவர், பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் தனது பசுமாடுகளை மேய்ச்சலுக்கு தரிசு நில வயல் பகுதிகளுக்கு கொண்டு சென்றார். அப்போது வயல் வெளியில் உயரழுத்த மின்கம்பி அறுந்து கீழே கிடந்துள்ளது. மின் கம்பியை மிதித்த 4 பசு மாடுகள் சம்பவ இடத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தது.

விவசாயத்தில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதால் பசுமாடுகளை வளர்த்து பாதுகாத்து தனது வாழ்வாதாரத்தை பெருக்கிவந்த விவசாயி தனசேகரனின் 4 பசுமாடுகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து முதுகுளத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com