அறிய வகை கடல் ஆமைpt desk
தமிழ்நாடு
ராமநாதபுரம்: வலையில் சிக்கிய ஆமை - பத்திரமாக கடலில் விட்ட மீனவர்கள்... குவியும் பாராட்டு!
சோழியக்குடி கடலில் மீனவர் வலையில் அறிய வகை கடல் ஆமை சிக்கி உள்ளது. அதனை பத்திரமாக உயிருடன் மீண்டும் கடலில் விட்ட மீனவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
செய்தியாளர்: அ.ஆனந்தன்
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே சோழியக்குடி கடலில் மீனவர்கள் ராமகண்ணன், சிவபாலன், ஜெயகணேஷ், முத்து ஆகியோர்கள் இன்று காலையில் நாட்டுப் படகில் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர். அப்போது இவர்களது வலையில் அரியவகை 100 கிலோ எடை கொண்ட கடல் ஆமை சிக்கியுள்ளது.
அறிய வகை கடல் ஆமைpt desk
இதையடுத்து வலையில் சிக்கிய அந்த அறியவகை கடல் ஆமையை, மீனவர்கள் பத்திரமாக மீண்டும் கடலில் உயிருடன் விட்டனர். இதுதொடர்பான வீடியோ வெளியான நிலையில், ஆமையை பத்திரமாக மீண்டும் கடலில் விட்ட மீனவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.