மாஸ்க் அணியாத முதியவர்: அபராதம் செலுத்தி உதவிய டிஎஸ்பி!

மாஸ்க் அணியாத முதியவர்: அபராதம் செலுத்தி உதவிய டிஎஸ்பி!

மாஸ்க் அணியாத முதியவர்: அபராதம் செலுத்தி உதவிய டிஎஸ்பி!
Published on

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் முகக்கவசம் அணியாத முதியவருக்கு காவல்துறையினர் விதித்த 200 ரூபாய் அபராதத்தை, டிஎஸ்பியே செலுத்தினார்.

கொரோனா தொற்று பரவல் தடுப்புக்காக மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திடுமாறு ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது. முதுகுளத்தூரில் முகக்கவசம் அணியாமல் அலட்சியமாகத் திரிபவர்களுக்கு டிஎஸ்பி ராகவேந்திரா ரவி தலைமையிலான காவல்துறையினர் அபராதம் விதித்தனர்.

பேருந்து நிலையம் அருகே முகக்கவசம் இன்றி சுற்றித்திரிந்தவர்கள், இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் அனைவருக்கும் 200 ரூபாய் அபராதம் விதித்தனர். அப்போது, அபதாரம் விதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் பணம் இல்லாமல் தவித்தபடி அங்கும் இங்கும் திரிந்து கொண்டிருந்தார். அவரது ஏழ்மை நிலையை புரிந்து கொண்ட முதுகுளத்தூர் டிஎஸ்பி ராகவேந்திரா ரவி, தனது சொந்தப் பணம் 200 ரூபாயை அபராதமாக செலுத்தி ரசீதை முதியவரிடம் கொடுத்து ஊருக்கு அனுப்பி வைத்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com