ராமநாதபுரம்: 35 கடற்படை வீரர்களுக்கு கொரோனா

ராமநாதபுரம்: 35 கடற்படை வீரர்களுக்கு கொரோனா
ராமநாதபுரம்: 35 கடற்படை வீரர்களுக்கு கொரோனா

ராமநாதபுரம் அடுத்த உச்சிப்புளியில் உள்ள ஐ.என்.எஸ் பருந்து கடற்படை தளத்தில் உள்ள 35 கடற்படை வீரர்கள் உட்பட 90 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ராமநாதபுரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 473 ஆக உயர்ந்துள்ளது.

ஐ.என்.எஸ் பருந்து கடற்படை தள வீரர்கள் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் ஐ.என்.எஸ் பருத்து கடற்படை தளம் மூடி சீல் வைக்கப்பட உள்ளது. 41 வீரர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 35 வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com