\
ராமநாதபுரம்: இரை தேடி வரும் மயிலுக்கு உணவளிக்கும் டீக்கடைக்காரர்!

ராமநாதபுரம்: இரை தேடி வரும் மயிலுக்கு உணவளிக்கும் டீக்கடைக்காரர்!

ராமநாதபுரம்: இரை தேடி வரும் மயிலுக்கு உணவளிக்கும் டீக்கடைக்காரர்!
Published on: 

ஆட்சியாளர் அலுவலகத்திற்கு இரை தேடி வரும் மயிலுக்கு உணவு வழங்கும் டீக்கடைக்காரர், ஆர்வத்துடன் பொதுமக்கள் மயிலை பார்வையிட்டுச் செல்கின்றனர்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு மரங்கள் வளர்ந்து இயற்கை எழில் கொஞ்சும் வகையில் குளுக் குளுவென ரம்யமான சூழலில் அமைந்துள்ளது.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இரை தேடி கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக மயில் ஒன்று தொடர்ந்து வந்துள்ளது.

இதையடுத்து அங்கு டீக்கடை நடத்திவரும் முருகன் என்பவர் இரை தேடி வரும் மயிலுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தங்களது கடையில் இருக்கும் கடலை, மிக்சர், வடை, போண்டா உள்ளிட்டவற்றை இரையாக மயிலுக்கு வழங்கி வருகிறார்.

இந்நிலையில், அங்கு டீ குடிக்க வரும் பல்வேறு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இதை ஆர்வமுடன் ஆச்சரியத்துடனும் பார்த்துச் செல்கின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com