தமிழக மீனவர்கள் கைது
தமிழக மீனவர்கள் கைது pt desk

ராமநாதபுரம் | எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 8 தமிழக மீனவர்கள் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை ஒரு படகுடன், இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
Published on

செய்தியாளர்: அ.ஆனந்தன்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து நேற்று 370-க்கும் மேற்பட்ட மீனவர்கள் விசைப்படகுகளில் 3000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். இதையடுத்து மீனவர்கள் மீன்பிடித்து விட்டு இன்று அதிகாலை கரை திரும்கிக் கொண்டிருந்தனர்.

Fisherman
Fishermanpt desk

அப்போது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஜேசு என்பவருக்குச் சொந்தமான விசைப்படகையும் அதிலிருந்த காந்தி வேல், செல்வம், ஈஸ்வரன், செய்யது இப்ராஹிம், கல்யாணராமன் உள்ளிட்ட 8 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர், அவர்களை தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.

தமிழக மீனவர்கள் கைது
சென்னை | ஏரியில் குளிக்கச் சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

இதனிடையே நேற்று இரவு கச்சத்தீவுக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த 20க்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப்படகுகளில் இருந்த மீன் பிடி வலைகளை கடற்படையினர் வெட்டி கடலில் வீசியுள்ளனர். இதனால் மீன்பிடிக்க முடியாமல் மீனவர்கள் பெருத்த நஷ்டத்துடன் கரை திரும்பியுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com