\
உயிரிழப்பு ஏற்படுவதற்குள் ஆழ்துளை கிணற்றை மூடுங்கள் - கிராம மக்கள் கோரிக்கை

உயிரிழப்பு ஏற்படுவதற்குள் ஆழ்துளை கிணற்றை மூடுங்கள் - கிராம மக்கள் கோரிக்கை

உயிரிழப்பு ஏற்படுவதற்குள் ஆழ்துளை கிணற்றை மூடுங்கள் - கிராம மக்கள் கோரிக்கை
Published on

முதுகுளத்தூர் அருகே 8 ஆண்டுகளுக்கு முன்பு தோண்டப்பட்ட ஆழ்துளை கிணறுகள் பயபாடற்று கிடப்பதால் அதை மூடுவதற்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்த தஞ்சாக்கூர் கிராமத்தில் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
 இக்கிராமத்தில் அங்கன்வாடி பகுதிக்கு அருகே 2 ஆழ்குழாய் கிணறுகள் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தோண்டப்பட்டன. அவை தற்போது பயன்பாடற்ற முறையில் உள்ளன. அதனை மூடக்கோரி அப்பகுதி மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். 

உயிரிழப்பு ஏற்படும் முன் தஞ்சாக்கூர் கிராமத்தில் அங்கன்வாடி மையம் அருகில் உள்ள இரண்டு ஆழ்குழாய் கிணறுகளை உடனடியாக மூட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

கடந்த சில நாட்களுக்கு முன், திருச்சி அருகே நடுகாட்டுப்பட்டி என்ற கிராமத்தில் சுஜித் என்ற இரண்டு வயது குழந்தை ஆழ்குழாய் கிணற்றில் விழுந்து உயிரிழந்தது 
குறிப்பிடத்தக்கது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com