\
ஜெயலலிதா மரணம் குறித்து சர்ச்சை கருத்து: பெண் கைது

ஜெயலலிதா மரணம் குறித்து சர்ச்சை கருத்து: பெண் கைது

ஜெயலலிதா மரணம் குறித்து சர்ச்சை கருத்து: பெண் கைது
Published on: 

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த சர்ச்சை கருத்துக்களை வெளியிட்ட ராமசீதா என்பவரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூரை சேர்ந்த ராமசீதா என்பவர் தன்னை சென்னை அப்பல்லோ மருத்துவமனையை சேர்ந்த பெண் மருத்துவர் எனக் கூறி, ஜெயலலிதா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதே சுயநினைவின்றிதான் இருந்தார் என்ற சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில் ராமசீதா என்பவர் மருத்துவரே இல்லை என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com