விஜய் - உதயநிதி - ஷாநவாஸ் - ராஜ்மோகன்
விஜய் - உதயநிதி - ஷாநவாஸ் - ராஜ்மோகன்PT

“விஜய் அப்படியென்றால் உதயநிதி...?” - ஆளூர் ஷாநவாஸ்க்கு பதிலடி கொடுத்த ராஜ்மோகன்!

தவெக தலைவர் விஜயை கூத்தாடி என்று விமர்சித்த ஆளூர் ஷாநவாஸ்க்கு பதிலடி கொடுக்கும் வகையில், விஜய் கூத்தாடி என்றால் உதயநிதி கூத்தாடி இல்லையா என்ற கேள்வியை ஊடகவியலாளர் ராஜ்மோகன் எழுப்பியுள்ளார்.
Published on

எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற நூல், சென்னை நந்தம்பாக்கத்தில் வெளியிடப்பட்டது. அந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு தலைமை வகித்த விஜய் நூலை வெளியிட, முதல் பிரதியை அம்பேத்கர் பேரன் ஆனந்த டெல்டும்டே பெற்றுக்கொண்டார். இரண்டாவது பிரதியை ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு பெற்றுக்கொண்டார்.

அம்பேத்கர் பற்றிய நூல் வெளியீட்டு விழா
அம்பேத்கர் பற்றிய நூல் வெளியீட்டு விழாபுதிய தலைமுறை

அப்போது மேடையில் பேசிய விஜய், “அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள முடியாத அளவிற்கு விசிக தலைவர் தொல் திருமாவளவன் அவர்களுக்கு பிரஷர் இருக்கிறது என்பது என்னால் உணர முடிகிறது. அவர் வரவில்லை என்றாலும் திருமாவளவனின் மனசு முழுக்க முழுக்க நம்முடன் தான் இருக்கும்” என்று பேசியிருந்தார். தவெக தலைவர் விஜயின் இந்தபேச்சு தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியது.

தவெக விஜய்
தவெக விஜய்

இந்நிலையில் விஜயின் அந்த கருத்திற்கு கண்டனம் தெரிவித்த விசிகவின் ஆளூர் ஷாநவாஸ்,“எங்கள் தலைவர் திருமாவளவன் குறித்து ஜெயலலிதா அம்மையாரோ, கலைஞரோ, இன்றைய முதல்வரோகூட இப்படி பேசியவதில்லை. அதிமுக கூட்டணியில் இருந்து எங்கள் தலைவர் விலகியபோதுகூட, ‘தம்பி எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும்’ என்றே சொன்னார் ஜெயலலிதா அம்மையார். அதுவே எங்கள் தலைவர் பெற்ற சான்றிதழ்.

அப்படியிருக்கையில், யார் இந்த கூத்தாடி விஜய்? அவருக்கு என்ன உரிமை இருக்கிறது. உண்மையில் விஜய் எங்கள் தலைவரை கொச்சைப்படுத்திவிட்டார். இன்றுவரை எங்கள் தலைவர், எழுதிவைத்து பேசினார் என்றுகூட யாராலும் சொல்லமுடியாது. அப்படிப்பட்ட ஒருவரை, நேற்று வந்த ஒருவர் இப்படி பேசலாமா? எங்கள் தலைவரை மலினப்படுத்துகிறார். திட்டமிட்டு அரசியல் காய் நகர்த்தி விசிக-விற்கு அரசியல் அழைப்பு விடுக்கிறார் விஜய். மலிவான அரசியலை வெளிப்படுத்துகிறார்” என்று புதிய தலைமுறை நேர்பட பேசு நிகழ்ச்சியில் கடுமையாக சாடி பேசியிருந்தார்.

ஆளூர் ஷாநவாஸ்
ஆளூர் ஷாநவாஸ்

இந்நிலையில் ஷாநவாஸின் கூத்தாடி என்ற விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியிருக்கும் ஊடகவியலாளர் ராஜ்மோகன், விஜய் கூத்தாடி என்றால் உதயநிதி கூத்தாடி இல்லையா என்ற கேள்வியை முன்வைத்துள்ளார்.

விஜய் கூத்தாடி என்றால் உதயநிதி யார்?

புதிய தலைமுறையின் நேற்றைய நேர்பட பேசு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஊடகவியலாளர் ராஜ்மோகன் பேசுகையில், “மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பது சரிதான். ஆனால், மற்ற மாநிலங்களில் கூட்டணி கட்சியினருக்கு அமைச்சரவையில் இடம் தரப்படுகிறது, துணை முதலமைச்சராக இடம் தரப்படுகிறது. காங்கிரஸில் கூட இடையில் மன்மோகன் சிங் வந்துபோனார், ஆனால் மாநில ஆட்சியில் மட்டும் ஏன் அது நடக்காமல் இருக்கிறது.

மத்தியில் கூட்டாட்சி வேண்டுமென்றால், மாநிலத்திலும் கூட்டாட்சியை கொண்டுவருவதிலும், கூட்டணி கட்சிகளுக்கு அதிகாரம் வழங்குவதிலும் என்ன தவறு இருக்கிறது. தேர்தலின் போது மட்டும் வாருங்கள் எல்லோரும் கூட்டணி வைத்துக்கொள்வோம் என அழைக்கும் நீங்கள், ஏன் ஆட்சி என, அதிகாரம் என வரும்போது மட்டும் கூட்டணியில் இருப்பவர்களை புறக்கணிக்கிறீர்கள். இனிமேல் அதிகாரப் பகிர்வு குறித்து பேசாமல் தமிழக அரசியல் இல்லை” என்ற பார்வையை முன்வைத்தார்.

அதேநேரத்தில் தவெக தலைவர் விஜயை கூத்தாடி என்று விமர்சித்த ஆளூர் ஷாநவாஸ்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய ராஜ்மோகன், “விஜய் பேசியதுபற்றிய கேள்விக்கு பதிலளித்த உதயநிதி, சினிமா செய்தி பார்ப்பதில்லை என்கிறார். அவர் இருக்கும் இடத்திற்கும், பதவிக்கும்... அவர் ஒரு விஷயத்தை இப்படி அனுகியிருக்க வேண்டாம். கொஞ்சம் ஆராய்ந்து, நிதானத்துடன் பேசியிருக்க வேண்டும். வார்த்தைப் பிரயோகத்தில் கவனம் வேண்டும்.

நேற்றுகூட விஜய் குறித்து இதே புதிய தலைமுறையின் நேர்படப்பேசு நிகழ்ச்சியில் கொந்தளித்து பேசிய எம்.எல்.ஏ. ஆளூர் ஷாநவாஸ் தன்னிலை மறந்து சமநிலை தவறி ‘ஒரு கூத்தாடிக்கு என்ன உரிமை இருக்கிறது?’ என்று கூறினார். அவ்வளவு பதற்றமாக தேவையில்லை. மாற்றுக்கருத்துகளில் இருந்து, நாம் எதை எடுத்துக் கொள்ளலாம் என்று பார்த்திருக்க வேண்டும். அதைவிடுத்து, நிலை தவறி இந்த தலைமுறை தலைவர்கள் பேசக்கூடாது.

சரி... விஜய் கூத்தாடி என்றால் உதயநிதி ஸ்டாலின் கூத்தாடி இல்லையா? ஒருவர் ஒருபுறம் சினிமா செய்திகள் பார்ப்பதில்லை என்கிறார், மற்றொருவர் தற்குறி என்று கூறி சிறுமை படுத்துகிறார்கள். இப்படியெல்லாம் கூறிவிட்டு அவர்கள் கடந்துசெல்ல முயற்சி செய்கிறார்கள். ஆனால் 2026-ல் இவை அனைத்திற்கும் மக்கள் பதிலளிப்பார்கள். குறிப்பாக மகளிரும், அடுத்த தலைமுறை பட்டதாரிகளும் பதிலளிப்பார்கள்” என்று விமர்சித்து பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com